COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 511 பேர் பாதிப்பு..!

Singapore reports 528 new cases of COVID-19, taking total to 14,951
Singapore reports 528 new cases of COVID-19, taking total to 14,951

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 28) நிலவரப்படி, புதிதாக 528 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 14,951ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர்களின் மன நலனை ஆதரிப்பதற்கான ஆலோசனை…!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 7 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் 7 பேர் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள், இரண்டு பேர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் ஒருவர் வருகை அனுமதி வைத்திருப்பவர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 83 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.

புதிய குழுமங்கள்

4 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • 33 Sungei Kadut Loop
  • 23H Sungei Kadut Street 1
  • 10 Tagore Drive
  • 51H Tuas South Ave 1

இதையும் படிங்க : KTP மருத்துவமனையில் இறந்த இந்திய ஊழியர் 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்; ஒருவரின் வருமானத்தில் இயங்கிவந்த குடும்பம்..!