சிங்கப்பூரில் புதிதாக 4,297 பேருக்கு COVID-19 பாதிப்பு – ஒருவர் இறப்பு

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் நேற்று பிப்., 3 நிலவரப்படி, புதிதாக 4,297 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 4,087 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 210 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?

ஒருவர் தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 860ஆக உள்ளது.

வியாழக்கிழமை பதிவான சம்பவங்களில், நடைமுறை 2ல் 2,742 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் மற்றும் 2,730 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

PCR சோதனைகள் மூலம் மேலும் 1,555 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 198 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 1,357 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

கொள்ளையில் ஈடுபட்ட துஷீந்தர் சேகரனுக்கு சிறை, பிரம்படி – கார்த்திக் வழக்கு நிலுவை!