அதிகரிக்கும் கொரோனா பரவல்..தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டும் மூத்தோர்கள்.!

Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. சமூக அளவில் கிருமித்தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும், 70 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் சுமார் 1,000 பேர் COVID19-க்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டம் எப்போது சாத்தியமாகும்.? – அமைச்சர் தகவல்.!

ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த நிலையை விட அது ஒரு மடங்கு அதிகம் என சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வயதானவர்கள் விகிதம் 80 விழுக்காட்டை தாண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வயதானவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தற்போது பலன் தருகிறது என்றும், சிங்கப்பூரில் தற்போது வயதானவர்களில் 10இல் 7 பேர் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற்றுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது அவசியம் – அதிபர் ஹலிமா யாக்கோப்.!