‘இந்த கடினமான நேரத்தில் மலேசியா, பிலிப்பைன்ஸுக்கு சிங்கப்பூர் துணை நிற்கும்!’

Photo: Wikipedia

புயல், மழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்களால் மலேசியா (Malaysia), பிலிப்பைன்ஸ் (Philippines) ஆகிய இரு நாடுகளிலும் பெருத்தச் சேதம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ராணுவத்தினர், காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் உதவி செய்து வருகின்றன.

மலேசியா, பிலிப்பைன்ஸில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்!

இந்த நிலையில், மலேசியா, பிலிப்பைன்ஸில் நிவாரணம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சுமார் 60,000 அமெரிக்க டாலர் (US$60,000) வழங்கப்படும் என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (MINISTRY OF FOREIGN AFFAIRS) நேற்று (22/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “மலேசியாவில் வெள்ளம் மற்றும் பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சிங்கப்பூரின் மனிதாபிமான உதவி.

‘சிங்கப்பூர் பள்ளிப் பாடத்தில் இடம் பெற்ற தமிழ்நாட்டு கவிஞரின் கவிதை!’- குவியும் பாராட்டுகள்

மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் (Singapore Red Cross-‘SRC’) பொது நிதி திரட்டலை ஆதரிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் 60,000 அமெரிக்க டாலரை (US$60,000) விதைப் பணமாக அளிக்கும். மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பிலிப்பைன்ஸில் ராய் புயல் காரணமாக, பல உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்கள் சேதம், சமூகங்களுக்கு கஷ்டங்களையும், துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

மலேசிய செஞ்சிலுவைச் சங்கம் (Malaysian Red Crescent) மற்றும் பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (Philippine Red Cross) தலா 50,000 அமெரிக்க டாலர்களை (US$50,000) சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross) வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு இந்த நிதி பங்களிப்பை வழங்கவுள்ளது.

நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”

நெருங்கிய நண்பராகவும், சக ஆசியான் உறுப்பு நாடாகவும் (ASEAN Member State), சிங்கப்பூர் இந்த கடினமான நேரத்தில் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளது.