மலேசியா, பிலிப்பைன்ஸில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்!

சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் மிக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

இனி இந்த ஊழியர்களுக்கு 7 நாள் PCR சோதனை முறை, N95 முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு கட்டாயம்

மலேசியாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் ஆங்காங்கே வெள்ளைப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், காவல்துறை ஈடுபட்டுள்ளது. தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள், பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மலேசியாவுக்கு நிதியுதவியை வழங்கியுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக, சுமார் 10- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டில் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

TravelUpdate: VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமை – மீறினால் நடவடிக்கை

இந்த நிலையில், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசின் சார்பில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிங்கப்பூர் அரசு செய்ய தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளார். அதேபோல், மலேசியாவுடன் சிங்கப்பூர் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நிலவழி VTL: “ஜனவரி 21 முதல் தினசரி பேருந்து பயணங்கள் பாதியாக குறைக்கப்படும்”

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (21/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கப்பூரர்கள் உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிங்கப்பூரர்கள் உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். மேலும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் eregister.mfa.gov.sg என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகத்தையோ (Ministry of Foreign Affairs Duty Office) அல்லது கோலாலம்பூர் மற்றும் மணிலாவில் உள்ள தொடர்புடைய வெளிநாட்டுத் தூதரகங்களையோ (Relevant Overseas Missions in Kuala Lumpur and Manila) தொடர்பு கொள்ளலாம். அதன் விவரங்கள் பின்வருமாறு:

‘சிங்கப்பூர் பள்ளிப் பாடத்தில் இடம் பெற்ற தமிழ்நாட்டு கவிஞரின் கவிதை!’- குவியும் பாராட்டுகள்

வெளியுறவு அமைச்சகத்தின் 24 மணி நேரமும் செயல்படும் அலுவலகம் (Ministry of Foreign Affairs Duty Office, 24-hours),
தொலைபேசி எண்: +65 6379 8800 / 8855,
மின்னஞ்சல்: mfa_duty_officer@mfa.gov.sg.

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் (High Commission of the Republic of Singapore in Kuala Lumpur),
தொலைபேசி எண்: +60-3-2161-6277,
அவசரத் தொலைபேசி எண்: +60-16-661-0400,
மின்னஞ்சல்: singhc_kul@mfa.sg.

மணிலாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் (Embassy of the Republic of Singapore in Manila),
தொலைபேசி எண்: +63-2-8856-9922,
அவசரத் தொலைபேசி எண்: +63-917-860-4740,
மின்னஞ்சல்: singemb_mnl@mfa.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.