வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த எதிர்கட்சி கருத்துக்கு மனிதவள அமைச்சர் விளக்கம்.!

Image Credits: MCI

கொரோனா வைரஸ் (COVID-19) நெருக்கடியை சிங்கப்பூர் அரசு கையாண்ட விதம் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்களைப் பரிசோதனைகளுக்கு அனுப்ப, கிருமிப்பரவலின் ஆரம்ப காலத்தில் முதலாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன. அந்த காலக்கட்டத்தில், அரசின் கவனம் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் மீது இருந்தது என்றும், ஆரோக்கியமாக இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சோதனை செய்ய வளங்களைப் பயன்படுத்துவது மருத்துவமனைகளுக்கு அளவுக்கு மீறிய சுமையாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் சென்ற மாதம் வரை 140 பேரின் வேலை அனுமதி ரத்து; 6,600க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிப்பு..!

மேலும், “உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்களை COVID-19 நோய்க்கான பரிசோதனைக்கு அனுப்பக்கூடாது என்று சிங்கப்பூர் அரசு ஒருபோதும் கூறியதில்லை” என்றார்.

சிங்கப்பூரில் தற்போது COVID-19 கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் தியோ சுட்டிக்காட்டினார்.