சிங்கப்பூரில் உள்ள இந்த வட்டாரங்களில் கிருமித்தொற்று சிறப்பு பரிசோதனை.!

Singapore Tiong Bahru Swabbing
Pic: Tiong Bahru

சிங்கப்பூரில் உள்ள தியோங் பாரு சந்தை, உணவு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு நேற்று (18-06-2021) முதல் கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை தொடங்கியுள்ளது.

ரெட்ஹில், தியோங் பாரு வட்டாரங்களில், கிருமித்தொற்று சிறப்பு பரிசோதனை நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சகம் தேர்ந்தெடுத்த 8 இடங்களில் அந்த சந்தை முன்னிலையில் உள்ளது. அங்கு 370-திற்க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் மேராவில் அதிகரித்துவரும் தொற்று சம்பவங்கள்; தளர்வுகள் குறித்து அமைச்சர் வோங் மறுபரிசீலனை.!

தியோங் பாரு வட்டாரத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களைச் சோதனை மூலம் முன்கூட்டியே கண்டறிய முடியும் எனவும், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனவும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

Boon Tiong சாலை Black 2D-லும், Jalan Membina Black 18-லும் தற்காலிகச் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், Black 84-A, ரெட்ஹில் லேனிலும் சோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்று பரிசோதனை நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அரங்கேறி வரும் தடுப்பூசி தொடர்பான மோசடிகள்; விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.!