இந்த நாட்டின் பகுதிக்கு பயணிக்க வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்

6 S'poreans evacuated from Israel

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராட்ட குழு நடத்திய தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதோடு வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.

“இனி சிங்கப்பூரில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை” – குளியலறை கதவு கீழே கைபேசியை நுழைத்து வீடியோ எடுத்த நபர்கள் – மனமுடைந்த பெண்

இஸ்ரேல் மீது நேற்று (அக்டோபர் 7) ஹமாஸ் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது, இதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காஸா மக்கள் 230 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், இஸ்ரேலின் தெற்கே செல்லும் அனைத்து பயணங்களையும் சிங்கப்பூரர்கள் தவிர்க்க வேண்டும் என்று MFA கூறியது.

இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என MFA கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவும் அது வலியுறுத்தியது.

சிகரெட் தொடர்பான விவகாரம்.. தங்கும் விடுதி அருகே சட்டவிரோத செயல்… சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் 5 பேர்