படிப்படியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்தி வருகிறது சிங்கப்பூர் – பிரதமர் லீ

MCI

சிங்கப்பூர் படிப்படியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்தி வருவதாகவும், ஒவ்வொரு நகர்விலும் நிலைமை சீரடைவதை உறுதி செய்து வருவதாகவும் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

இதனால் கவலை உண்டாக்கும் திருப்பங்களை தவிர்க்கலாம் என்றும் திரு. லீ கூறினார்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை விதிப்பு

கட்டுப்பாடுகளை கொஞ்சம் எளிதாக்கி, பின்னர் அதன் பாதுகாப்பு சூழலை உறுதிசெய்து, மேலும் கொஞ்சம் கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் அதன் பாதுகாப்பு சூழலை உறுதிசெய்து எளிதாக்குவதையே தாம் முயற்சித்து வருவதாக அவர் கூறினார்.

“இறுதியாக பழைய நிலைக்குத் திரும்ப முடியாவிட்டாலும், போதுமான அளவு பழைய நிலைக்கு நெருக்கமாக திரும்ப முடியும்.”

மேலும், கவலை உண்டாக்கும் திருப்பங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் புதன்கிழமை அவர் கூறினார்.

கிருமித்தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரிக்கும் போது, மீண்டும் கடுமையான நடவடிக்கை என்றால், சிங்கப்பூர் மக்கள் விரக்தியடைந்து ஏமாற்றமடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.

அதனால் இதை படிப்படியாக மேற்கொள்வது நல்லது என்று நினைப்பதாக அவர் சொன்னார்.

மேலும், கட்டுப்பாடுகள் விதிக்காமல் இதைச் செய்ய முடியும் என்பதில் உறுதி இல்லை என கூறிய அவர், தேவைப்படும்போது மீண்டும் பிரேக்கை அழுத்த வேண்டியிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதுதான் தனது திட்டம் என்றும் திரு லீ கூறியுள்ளார்.

“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை