சிங்கப்பூரில் இந்த மாதத்தில் முதல் 2 வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?

Singapore weather on Dec Met Service
Singapore weather on Dec - Met Service

இந்த மாதம் டிசம்பர், முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (MSS) நேற்றைய (டிசம்பர் 1) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் குறுகிய நேரத்திற்கு மிதமான முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று MSS தெரிவித்துள்ளது.

COVID-19: சாங்கி விமான நிலைய துப்புரவு ஊழியர், தங்கும் விடுதியில் உள்ளவருக்கும் புதிய பாதிப்பு!

சில நாட்களில், சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் அளவு அதிகமாக இருப்பதால், இடியுடன் கூடிய மழை தீவிரமாகவும் பரவலாகவும் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களில் பிற்பகுதியில் வடகிழக்கு காற்று வலுப்பெறுவதை எதிர்பார்க்கலாம்.

சில நாட்களில் அவ்வப்போது காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், மழைப்பொழிவு சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அது 34 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும். ஒரு சில மழை நாட்களில், தினசரி 22 டிகிரி செல்சியஸ் அளவை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்திற்கான இந்தியா–சிங்கப்பூர் இருவழி விமான முன்பதிவுகள் தொடக்கம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…