COVID-19: சாங்கி விமான நிலைய துப்புரவு ஊழியர், தங்கும் விடுதியில் உள்ளவருக்கும் புதிய பாதிப்பு!

Singapore Community dormitory case
Singapore Community and dormitory case (PHOTO: Greg Waldron)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, உள்ளூர் தொற்றுநோய்களில் ஒன்று சமூக அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் சாங்கி விமான நிலைய முனையம் 3இல் துப்புரவாளராக பணிபுரியும் 66 வயது பெண் ஆவார் உள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த மாதத்திற்கான இந்தியா–சிங்கப்பூர் இருவழி விமான முன்பதிவுகள் தொடக்கம்!

COVID-19 கிருமித்தொற்றுக்கான எந்த அறிகுறியும் அவருக்கு தென்படவில்லை.

தற்போது தொடர்பு கண்டறியப்படாத அவரது தொற்று, முன்னணி ஊழியர்களின் இரு வார வழக்கமான சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

தற்போது தனது கணவருடன் அந்த பெண் யிஷுன் ரிங் ரோட்டில் தங்கியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

மற்றொரு சம்பவம், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, நவம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு பதிவான முதல் தொற்று இது.

கிருமித்தொற்றுக்கான எந்த அறிகுறியும் அவருக்கு தென்படவில்லை, அவர் அமைச்சின் வழக்கமாக நடத்தப்படும் கண்காணிப்பு சோதனை மூலம் அவர் கண்டறியப்பட்டார்.

மேலும், தங்கும் விடுதியிலும் வேலையிடத்திலும் அவரது நெருங்கிய தொடர்புகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

கிராசிங்கில் கவனக்குறைவாக மாணவியை மோதிய ஓட்டுனருக்கு சிறை, வாகனம் ஓட்டத் தடை!

தமிழ் நாளிதழ் வாங்கினால் பிரியாணி இலவசம்… அசத்தும் சிங்கப்பூர் தமிழர் உணவகம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…