கிராசிங்கில் கவனக்குறைவாக மாணவியை மோதிய ஓட்டுனருக்கு சிறை, வாகனம் ஓட்டத் தடை!

Taxi driver jail banned
Taxi driver jailed and banned (PHOTO: Screengrab from Google Street View )

ஜீப்ரா கிராசிங்கை நெருங்கும் போது, ​​டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தனது தொலைபேசியை பயன்படுத்திகொண்டே, 18 வயது மாணவி மீது மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவி சாலை மீது வீசி எறியப்பட்டார்.

அந்த சிறுமிக்கு மண்டை ஓடு மற்றும் மூளையில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரது மொழி செயல்பாடுகளிலும், செவிப்புலனிலும் குறைபாடுகளை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் நாளிதழ் வாங்கினால் பிரியாணி இலவசம்… அசத்தும் சிங்கப்பூர் தமிழர் உணவகம்!

வாகனம் ஓட்ட தடை

டாக்ஸி ஓட்டுநர், 64 வயதான யூ ஹாக் லெங் (Eu Hock Leng) என்பவருக்கு இன்று (டிசம்பர் 1) மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கடுமையான முறையில் வாகனம் ஓட்டி காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 17, அன்று இரவு 7.30 மணியளவில், அவர் புக்கிட் படோக் வெஸ்டில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது, ​​20 கிமீ வேகத்தில் ஒரு ஜீப்ரா கிராசிங்கை நெருங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவர் வாகனம் ஓட்டும்போது, ​​தனது வண்டியில் தொலைபேசி முன்பதிவு தொடர்பாக கவனித்து கொண்டே மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம்

கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நான்கு ஆண்டுகள் வரை சிறை, S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் அவர் வாழ்க்கை முழுவதும் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் நிறுவனத்தின் துரிதமான PCR கையடக்க சோதனைக் கருவி!

சிங்கப்பூரில் தேக்கா நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற தொற்று பாதித்த நபர்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…