அவசியல்லாமல் இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்

singapore retrenched-workers support
Photo: Changi Airport Official Facebook Page

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவின் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

கடந்த செப். 8 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவில் உள்ள மராகேஷ், அல் ஹவுஸ், அவுர்சாசேட், அஸிலால், சிசாவ்வுவா மற்றும் டாரூடன்ட் போன்ற இடங்களுக்குத் தேவையின்றி சிங்கப்பூரர்கள் பயணிக்க வேண்டாம் என்று அமைச்சகம் வலியுறுத்தியது.

வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை – CCTV காட்சிகளில் அம்பலமான குற்றங்கள்

பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

விழிப்புடன் இருக்கவும், நிலைமையை கண்காணித்து, அங்குள்ள அதிகாரிகளின் அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவும், பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைந்து செல்லவும் MFA கூறியது.

மேலும், https://eregister.mfa.gov.sg என்ற இணையதளத்தில் சிங்கப்பூரர்களை பதிவு செய்யும்படியும் MFA கூறியுள்ளது.

கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்