150,000 சிங்கப்பூரர்களுக்கு மளிகை பொருள்கள் வாங்குவதற்கான வவுச்சர்கள்..!

Singaporeans grocery vouchers

வீட்டு செலவுகளுக்கு உதவுவதற்காக 150,000 சிங்கப்பூரர்களுக்கு மளிகை பொருள்கள் வாங்குவதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் (MOF) சனிக்கிழமை (அக். 10) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள், 1 அறை மற்றும் 2 அறைகள் கொண்ட HDB பிளாட்களில் வசிப்பவர்கள், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்காத சிங்கப்பூரர்கள் இந்த வவுச்சர்களுக்கு தகுதியானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு S$3,000 மானியம்..!

அக்டோபரில் S$150 மதிப்புள்ள மளிகை பொருள்கள் வாங்குவதற்கான வவுச்சர்களும், மேலும் இரண்டாம் முறையாக டிசம்பரில் S$150 மதிப்புள்ள வவுச்சர்களும் வழங்கப்படும்.

அதே போல, அடுத்த ஆண்டு அக்டோபரில் தகுதியான சிங்கப்பூரர்களுக்கு S$100 மதிப்புள்ள மளிகை பொருள்கள் வாங்குவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.

இதில் தகுதியானவர்கள் அக்டோபர் 2020இல் தங்கள் NRIC-பதிவுசெய்த முகவரியில் அஞ்சல் மூலம் வவுச்சர்களைப் பெறுவார்கள் என்று MOF கூறியுள்ளது, இதற்காக எந்தவொரு விண்ணப்பமும் தேவையில்லை.

தகுதிவாய்ந்த ஒவ்வொரு வீட்டு உறுப்பினரும் தங்களது வவுச்சர்களை தனித்தனியாகப் பெறுவார்கள் என்று அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த மளிகை வவுச்சர்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31, 2021 வரை செல்லுபடியாகும், மேலும் அவற்றை சூப்பர் மார்க்கெட்டுகளான FairPrice, Giant, பிரைம் சூப்பர்மார்க்கெட் மற்றும் Sheng Siong சூப்பர் மார்க்கெட்டுகளில் பயன்படுத்தப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தற்காலிக தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…