சிங்கப்பூரில் 52,000 பேர் S$1,300-க்கு குறைவான ஊதியம் ஈட்டுகின்றனர்.!

Singaporeans minimum wage
Pic: Mothership.sg

சிங்கப்பூரர்கள் சுமார் 52,000 பேர், S$1,300-க்கும் குறைவான ஊதியம் பெறுவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியைச் சேர்த்து, மத்திய சேமநிதிப் பங்களிப்பைக் கழித்த பிறகு இந்த தொகை கணக்கிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் காவல்துறையின் காரின் மீது மோட்டார் சைக்கிளில் மோதியவர் கைது..!!

சிங்கப்பூரர்கள் எத்தனை பேர் மாதம் S$1,300-க்கு குறைவாக சம்பாதிக்கின்றனர் என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Jamus Lim எழுப்பிய கேள்விக்கு Zaqy Mohamad பதிலளித்தார்.

சுயதொழில் செய்யும் 22,000 சிங்கப்பூரர்கள் மற்றும் உணவுச் சேவை, துப்புரவுப் பணிகள், சில்லறை விற்பனை போன்ற துறைகளில் முழுநேர பணியாளர்களாக உள்ள 30,000 சிங்கப்பூரர்களும் குறைந்த ஊதியம் ஈட்டுவதாக அவர் தெரிவித்தார்.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தின் சமையலறையில் சடலம் கண்டெடுப்பு..!

மேலும், குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்கள் வயது முதிர்ந்தவர்களாகவும், குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களாகவும் இருப்பதாக Zaqy Mohamad குறிப்பிட்டார்.

அரசிடமிருந்து இவர்களுக்கு பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டுகள், Comcare நிதியுதவி போன்ற ஏனைய ஆதரவுகள் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை மருத்துவம், வீட்டுக் கட்டணம் போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், குறைந்தபட்ச சம்பளத்தைக் கணக்கிடும்போது, வேலைநலன் துணை வருமானத் திட்ட உதவித் தொகையையும், மத்திய சேமநிதிப் பங்களிப்புகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்று Zaqy Mohamad கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு…தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…