கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மலிவாக கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் – துணை பிரதமர் பேச்சு.!

Singapore's deputy PM calls for strengthening global cooperation on COVID-19 vaccines
Photo: TODAY

கொரோன வைரஸ் (COVID-19) தடுப்பு மருந்து நியாயமாகவும், மலிவாகவும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், COVID-19 தடுப்பு மருந்தை விரைவாக பெருமளவில் தயாரிக்க வலுவான ஒத்துழைப்பு வழிவகுக்கும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: தன்னுடைய கையை தானாக வெட்டிக்கொண்ட இளைஞர் கைது..!

இந்த COVID-19 கிருமித்தொற்றை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இன்னும் அதிகமான நாடுகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து உலக ஒத்துழைப்புக்கான அடிப்படையை வலுப்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும் என்று திரு. ஹெங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…