சீனப் புத்தாண்டு- அஞ்சல் தலைகளை வெளியிட்ட சிங்கப்பூர் அஞ்சல் துறை!

Photo: SingPost

வரும் பிப்ரவரி மாதம் 1- ஆம் தேதி அன்று சீனப் புத்தாண்டு (Chinese New Year) கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு புத்தாண்டு புலி ஆண்டாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள சைனாடவுன் வழக்கம் போல் பண்டிகை அலங்காரங்களால் வண்ணமயமாக்கப்பட்டுள்ளது.

“நான் படுத்து உறங்கியதில் நீங்கள் படுக்கணுமா..?” சிங்கப்பூரில் $200 டாலர் வரை விலை போகும் தலையணைகள்! இப்படியும் சம்பாதிக்க வழி இருக்கு!

இந்த நிலையில், சீனப் புத்தாண்டின் புலி ஆண்டை வரவேற்கும் விதமாக, சிங்கப்பூர் அஞ்சல் துறை (Singapore Post), புலி படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளை நேற்று (07/01/2022) வெளியிட்டுள்ளது. இந்த புலி அஞ்சல் தலைகளை லிம் ஆன் லிங் (Lim An-Ling) வடிவமைத்துள்ளார்.

இது தொடர்பாக, சிங்கப்பூர் அஞ்சல் துறை (Singapore Post Press Release) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராணி எலிசபெத் II (Queen Elizabeth II), பாடகர் ஷான் மென்டிஸ் (Singer Shawn Mendes), ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ (Hollywood actor Leonardo DiCaprio) மற்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சி பிரபலங்கள் புலி ஆண்டில் பிறந்தவர்கள். பொதுவான நம்பிக்கையின்படி, புலி ஆண்டில் பிறந்தவர்கள் துணிச்சலானவர்கள், போட்டித் திறன் கொண்டவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள், ஆனால் கணிக்க முடியாதவர்கள்.

‘சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

பெரும்பாலும் வசீகரமானவர்களாகவும், மற்றவர்களால் விரும்பப்பட்டவர்களாகவும் இருந்தாலும், அவர்கள் சில சமயங்களில் தூண்டுதலாகவும், எரிச்சலூட்டும் மற்றும் அதிக இன்பம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

புலி அஞ்சல் தலைகள் 0.30 சிங்கப்பூர் டாலர் முதல் 1.40 சிங்கப்பூர் டாலருக்கு இடைப்பட்டிருக்கும். இரண்டு அஞ்சல் தலைகள் கொண்ட பேக் 4.15 சிங்கப்பூர் டாலருக்கும் (Presentation pack with both stamps is priced at S$4.15), மற்றவை 3.10 சிங்கப்பூர் டாலருக்கும் விற்கப்படும். இந்த அஞ்சல் தலைகள், அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், அஞ்சல் தலைகளை விற்பனை செய்யும் கடைகளிலும், சிங்கப்பூர் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை!

ஜனவரி 11- ஆம் தேதி முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி வரையிலான பண்டிகைக் காலத்தில் சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு முகவரிகளுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் கட்டணத்தில் தள்ளுபடி உண்டு. தள்ளுபடி தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவித்துள்ளது.

சீனப் புத்தாண்டின் முதல் நாளான பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று புலி ஆண்டு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.