வேலையிட விபத்துகளுக்கு சறுக்கல்கள், கால் இடறு, உயரத்தில் இருந்து வீழ்ந்ததே முக்கிய காரணம் – MOM

(Photo: MOM)

சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சறுக்கல்கள், கால் இடறு மற்றும் உயரத்தில் இருந்து வீழ்ந்தது ஆகியவை முக்கிய காரணம் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (அக் 31) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட வேலையிட விபத்து காயங்கள் அவைகளால் ஏற்பட்டதாகவும் MOM கூறியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மரணம் – சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டனரா?

கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு கிடங்கு, தங்கும் இடங்கள் மற்றும் உணவு சேவைகள் ஆகிய துறைகளில் சுமார் 750க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

வேலையிடத்தில் மேற்கண்ட விபத்து காரணிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 17 க்கு இடையில், மனிதவள அமைச்சகம் ஒன்பது வார அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

சறுக்கல்கள், கால் இடறு மற்றும் உயரத்தில் இருந்து வீழ்ந்தது இவற்றை கட்டுப்படுத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்ற நோக்கில் MOM பாதுகாப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளது.

மோசமான வானிலை… திருப்பிவிடப்பட்ட ஸ்கூட் – பயணிகள் கடும் அவதி