சில வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க சிறப்பு இடங்கள் ஏற்பாடு..!

Some foreign workers to be housed in ActiveSG halls, says Sport Singapore
Some foreign workers to be housed in ActiveSG halls, says Sport Singapore (Photo: SportSG)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோயைக் கையாள்வதற்கான “சர்க்யூட் பிரேக்கர்” நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்காலிகமாக மூடப்பட்ட விளையாட்டு வசதிகளில் ஓரளவு வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான அவசரத் தேவையை இது நிவர்த்தி செய்யும் என்று ஸ்போர்ட் சிங்கப்பூர் (SportSG) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 623 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

வேகமாக பரவி வரும் COVID-19 சூழலுக்கு ஏற்பவும், மேலும் இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் முதலாளிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக SportSG கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல், COVID-19 அறிகுறிகள் இல்லாத ஊழியர்கள், Pasir Ris, Jurong West, Clementi மற்றும் Hougang ஆகிய இடங்களில் உள்ள ActiveSG விளையாட்டு அரங்குகளில் படிப்படியாக தங்க வைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு ஊழியர்களுக்கு கடுமையான நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!