செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய சிங்கப்பூர் சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய சிங்கப்பூர் சிறுவனுக்கு குவியும் பாராட்டு!
Photo: @kaushiksriram/ X

 

செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டரை (Grand master) வீழ்த்தி சிங்கப்பூரைச் சேர்ந்த சிறுவன் அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை

பிப்ரவரி 16- ஆம் தேதி முதல் பிப்ரவரி 18- ஆம் தேதி வரை ஸ்விட்சர்லாந்து நாட்டில் பல்வேறு பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த செஸ் போட்டியில், சிங்கப்பூர், இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், சிங்கப்பூரைச் சேர்ந்த அஷ்வத் கௌசிக் (Ashwath Kausik) என்ற 8 வயது சிறுவன் கலந்து கொண்டார். கிராண்ட் மாஸ்டர் ஜாக் ஸ்டோபா (Jacek Stop) என்ற 37 வயதான வீரரை எதிர்கொண்டார் அஷ்வத் கௌசிக். செஸ் போட்டி தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடிய சிறுவன், இறுதியில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி அசத்தினார்.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் திடலிலே வைக்கப்பட்ட உணவு – தற்போது மாறியுள்ளதாக நன்றி சொல்லும் ஊழியர்கள்

செஸ் போட்டியில் உயரிய அங்கீகாரமான கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய சிங்கப்பூர் சிறுவனுக்கு சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் பிறந்த அஷ்வத் கௌசிக், தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்துள்ளார். சிங்கப்பூரில் சுமார் 6 ஆண்டுகளாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சிவன் கோயிலில் ‘மஹா சிவராத்திரி பூஜைகள்’ நடைபெறும் என்று அறிவிப்பு!

நாள்தோறும் சுமார் ஏழு மணி நேரம் செஸ் போட்டியில் விளையாடுவதற்காக செலவிட்டுள்ள அஷ்வத் கௌஷிக், சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் கோ (Kevin Goh, CEO of the Singapore Chess Federation) மற்றும் சக பயிற்சியாளர்களுடன் இணக்கமாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.