கட்டுமானத் துறையில் உள்ள வேலை அனுமதி மற்றும் S Pass வைத்திருப்பவர்களின் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு நீட்டிப்பு..!

Stay-home notice for foreign workers, dependants in construction sector extended to May 18
Stay-home notice for foreign workers, dependants in construction sector extended to May 18 (Photo: ST)

கட்டுமானத் துறையில் பணிபுரியும் சுமார் 180,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் வீட்டில் தங்கி இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அது தற்போது COVID-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர்களுக்கு உதவவும், தேவையான அனைத்து முயற்சிகளையும் முதலாளிகள் மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் லீ..!

வேலை அனுமதி மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு அறிவிப்பு ஆரம்பத்தில் மே 4 வரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இது மே 18 இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகள் இல்லாத வளாகத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட கட்டுமான துறையில் உள்ள வேலை அனுமதி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று மனிதவள அமைச்சகம் (MOM), சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) ஆகியவை கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 180,000 ஊழியர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள், தற்போது தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலை, கட்டுமானத் தளங்களில் தற்காலிக இடவசதிகளை மற்றும் கடை வீடுகள் போன்ற தனியார் குடியிருப்பு வளாகங்களில் தங்கியுள்ளனர்.

180,000 பேரில் சுமார் 27,000 பேர் அல்லது 15 சதவீதம் பேர், பெரும்பாலும் S Pass வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் என்றும், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் (Housing Board flats) வசிக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.