சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் வந்த இருவருக்கு டெல்டா பாதிப்பு – 146 பேர் தனிமை

Madurai airport
(PHOTO: iamrenew)

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த அந்த 2 பேருக்கு டெல்டா வகை பாதிப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

லிட்டில் இந்தியாவில் S$300,000 கொள்ளை: வெளிநாட்டவர் உட்பட கடைசி இருவர் குற்றாவளி என அதிரடி தீர்ப்பு

மேலும், அவர்கள் திருவாடானை மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டும் இதுவரை 146 பேர் வந்துள்ளனர்.

அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை விமான நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சொந்த ஊருக்கு அனுப்படுகின்றனர்.

அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு, மேலும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர், அதில் 120 பேருக்கு 7 நாள் முறை பரிசோதனையும், 60 பேருக்கு 2 வார பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளின் அடிப்படையில் இதுவரை யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)