சிங்கப்பூர் லாட்டரியில் எப்படியெல்லாம் வின் பன்றாங்க பாருங்க.. 4D டிராவில் வெற்றிபெற்ற நபர் – ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

Taylor Swift concert Singapore 4D draw
Photo: @its_all_marc/TikTok

Taylor Swift concert Singapore 4D draw: சிங்கப்பூரில் ஒருவர் இசை கச்சேரிக்காக வாங்கிய டிக்கெட்டின் முதல் நான்கு வரிசை எண்களை வைத்து 4D டிராவில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பிரபல அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை கச்சேரி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

பேருந்து, லாரி உட்பட 4 வாகனங்கள் மோதி கடும் விபத்து: ஒருவர் மரணம் – லாரி ஓட்டுநர் கைது

அதற்காக அவரின் ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அதில் ஒரு டிக்கெட்டை வாங்கிய நபர் முதல் நான்கு வரிசை எண்களில் பந்தயம் கட்டி S$250 வெற்றி பரிசை தட்டி சென்றுள்ளார்.

இசை கச்சேரிக்காக அவர் வாங்கிய டிக்கெட்டின் வரிசை எண் 53875 ஆகும். அதில் முதல் நான்கு எண்களான 5387ஐ 4D டிராவில் பந்தயம் கட்டி வென்றுள்ளார் அவர்.

இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது, அதே போல டிக்கெட் பெற்ற மற்றவர்களும் அதனை முயற்ச்சி செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், அதிஷ்டம் எல்லாருக்கும் ஒரே நேரத்தில் கதவை தட்டாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை

“Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ இத செய்” – பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… சுதாரித்த நபர்

Singapore Pools கடையில் டிக்கெட் வாங்க சென்றவருக்கு அடி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்

சிங்கப்பூரில் அனைத்து Singapore Pools கிளைகளும் மூடல் – ஏன் தெரியுமா?