“வூஹான் வைரஸை எவ்வாறு பரப்புவது” என்று சூப்பர்மார்கெட்டில் காணொளி எடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு..!

singapore-supermarkets plastic bags charge

NTUC ஃபேர் பிரைஸ் சூப்பர் மார்க்கெட்டில் பிறர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் குளிர்பானம் அருந்தும் ஸ்டண்டில் ஈடுபட்ட இரண்டு இளையர்கள் மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 9) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இரவு 7.45 மணியளவில், 2 புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 7இல் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நைஜல் பாங் யூ மிங் (Nigel Pang Yew Ming) என்ற இளையர் குளிர்பான பாட்டிலை எடுத்து அதை அருந்தும் வீடியோவை கியூக் ஜுவான் ஸி (Quek Xuan Zhi) எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் அதிகபட்சமாக 142 பேர் பாதிப்பு..!

பின்னர் அருந்திய அந்த பாட்டிலை மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளனர். மேலும் “வூஹான் வைரஸை எவ்வாறு பரப்புவது” என்ற தலைப்பில் அவர்கள் இந்த செயல்களை படமாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, 17 வயதுடைய இரண்டு இளையர்களும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இருவரில் ஒருவர் அந்த வீடியோவை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருந்தார், ஆனால் அந்த விடியோவை அவர்களுக்கு அறிமுகமான ஒருவர் வலைதளத்தில் பரப்பியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் போலீஸ் அறிவுரையை கேட்க மறுத்த முதியவர்; தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டதால் கைது..!