மாஸ் காட்டும் “தேக்கா நிலையம்”… பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் திறப்பு

தேக்கா நிலையத்தின் முதல் தளம்
gengcarimakansg / Alvin Tan on Facebook

பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் பரபரப்பான தேக்கா நிலையம் மற்றும் உணவகம் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புதுப்பிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜூலை 3 ஆம் தேதி அது மூடப்பட்டது.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

3 மாத பணிகள் முடிந்த பிறகு, தேக்கா நிலையத்தின் முதல் தளம் இன்று அக்.1 (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் செயல்படத் தொடங்கியது.

மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே உணவகத்தில் கூட்டத்தை காண முடிந்தது.

புதிய அமைப்புகள் மற்றும் மேம்பாடு

அங்கு வடிகால் அமைப்பு மற்றும் காற்றோட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக அங்குள்ள கடைக்காரர்கள் எதிர்கொண்ட வடிகால் குழாய்கள் மாற்றப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேம்பட்ட காற்றோட்டத்தை வழங்க பெரிய மின்விசிறிகளும் அங்கு நிறுவப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட நிலையத்தில் பறவை தடுப்பு வலைகள் மற்றும் பறவை தடுக்கும் கூர்முனை அமைப்புகள் உள்ளன.

மேலும், புதிய தரைத்தளம், வண்ணப்பூச்சு, புதிய மேசைகள் மற்றும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள் மற்றும் புதிய புகைபிடிக்கும் இடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு

தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?