சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

Three new clusters have been found at the migrant worker dormitories
Three new clusters have been found at the migrant worker dormitories (Photo: NYTimes)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 23,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 709 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள், அவற்றின் வடிவமைப்பு ஆகியவற்றில் புதிய விதிமுறைகள்..!

மொத்தம் 23,175 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 331 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,306 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் மூன்று புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,

  • 6 Tuas View Square
  • 65 & 67 Tuas View Walk 2
  • 18 Woodlands Industrial Park E1

இதையும் படிங்க : புற்றுநோயால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர்; கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூரர்கள்..!