பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

3 people, including 1-year-old boy, sent to hospital after hit-&-run along PIE
3 people, including 1-year-old boy, sent to hospital after hit-&-run along PIE (Photo from Google Maps)

பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) நேற்று (ஜூலை 6) மாலை ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது சிறுவன் மற்றும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று இரவு 8 மணிக்கு முன்னதாக துவாஸை நோக்கிய PIE சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த எதிர்கட்சி கருத்துக்கு மனிதவள அமைச்சர் விளக்கம்.!

இதனை அடுத்து, ஒரே காரில் இருந்த இரண்டு பயணிகள், அதாவது 27 வயது பெண் மற்றும் ஒரு வயது சிறுவன் ஆகியோர் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவில் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், காரை ஓட்டி வந்த 34 வயது நபர் சாங்கி பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் “இந்தியர்களுக்கான இடம் எப்போதும் பாதுகாக்கப்படும்” அமைச்சர் சண்முகம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg