தனிமைப்படுத்தல் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்த 8 பேரிடம் விசாரணை!

Singapore travel
(Photo: AFF/Roslan Rahman)

சிங்கப்பூரில் பிரத்யேக வசதிகளில் COVID-19 வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (Stay-home notice) தவிர்ப்பதற்காக, தங்கள் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்த 8 பயணிகளை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

அந்த எட்டு பேரில், நான்கு பேர் சிங்கப்பூர் குடிமக்கள், இரண்டு பேர் நிரந்தரவாசிகள் மற்றும் இரண்டு பேர் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள்.

லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்டம்

வெளிநாடுகளில் இருந்து வருகை

கடந்த நவம்பர் 5 – நவம்பர் 12 இடைப்பட்ட காலத்தில், தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் இருந்து அந்த பயணிகள் சிங்கப்பூர் வந்ததாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மற்றும் சிங்கப்பூர் காவல் படை (SPF) இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளன.

சொந்த இடத்தில் நிறைவேற்ற அனுமதி

நவம்பர் 4 முதல் 14 நாள் வீட்டில் தங்கும் உத்தரவை, தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக வசதிகளுக்குப் பதிலாக அவர்கள் வசிக்கும் இடத்தில் நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில், அந்த பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்பு, கடைசி 14 நாட்களில் மற்ற நாடுகளுக்கோ அல்லது பிராந்தியங்களுக்கோ சென்றிருக்கக்கூடாது.

அதிகாரிகள் சோதனை

அவர்கள் சொந்த இடங்களில் தனியாக இருக்கப்போவதாகவும், அல்லது தங்களுடன் பயணம் செய்தவர்களோடு இருக்கப்போவதாக விண்ணப்பங்களில் குறிப்பிட்டனர்.

ஆனால், அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​அவர்கள் தங்கள் கட்டாய உத்தரவு விதிக்கப்படாத வீட்டு உறுப்பினர்களுடன் தங்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து, எட்டு பேரும் பிரத்யேக தங்கும் வசதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும் அவர்களது இந்த புகார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

சட்டம்

தவறான தகவல் அளிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 6 மாதச் சிறை அல்லது S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் இருவர் கைது

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…