சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் இருவர் கைது!

Illegal entry Singapore arrested
2 men arrested for entering Singapore with 300 cartons of duty-unpaid cigarettes (Photo: SPF)

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக தீர்வை செலுத்தப்படாத 300 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளுடன் நுழைந்த இரண்டு இந்தோனேசிய ஆடவர்கள், இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

சாங்கி கண்காட்சி மையத்திற்கு அருகே தேசிய பூங்கா வாரியத்தின் (NParks) ஒப்பந்தக்காரர், அந்த ஆடவர்களில் ஒருவரைக் கண்டுபிடித்ததை அடுத்து, கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்து…தகவல் வேண்டி பதிவிட்ட குடும்பம்!

கைது

அதனை தொடர்ந்து, கடலோர காவல்படை, பெடோக் காவல் பிரிவு மற்றும் கூர்க்கா படைப்பிரிவின் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், 25 மற்றும் 58 வயதுக்குட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல்

அதன் பின்னர், அவர்களிடம் இருந்து 300 தீர்வு செலுத்தப்படாத சிகரெட் அட்டைப்பெட்டிகள், கண்ணாடியிழை படகு, இயந்திரம் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை

அவர்கள் இருவரும் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக குடிநுழைவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம்

சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்கு, 6 மாதம் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

தீர்வை செலுத்தப்படாத பொருட்களை வைத்திருப்பதற்கு, அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையை விட 40 மடங்கு வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்க உதவும் புதிய வேலை அனுமதி – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…