வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!

Travellers who serve stay-home notice outside of facilities after entering Singapore must wear electronic device
Travellers must wear electronic device (Photo: Roslan Rahman / AFP/Getty Images)

சிங்கப்பூருக்குள், சிறப்பு வசதிகளுக்கு வெளியே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றும் பயணிகள், 14 நாட்கள் முழுவதும் மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது அடுத்த செவ்வாய்க்கிழமை (ஆக. 11) முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வழிபாட்டுத் தலங்களில் புதிய செயல்முறையுடன் கூடுதல் விதிமுறைகள்..!

இது சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள், வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் கல்வி அமைச்சகம் (MOE) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

முக்கியமானவை

இதில் 12 வயது மற்றும் அதற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்ததும், குடிவரவு சோதனைக்குப் பிறகு பயணிகளுக்கு மின்னணு கண்காணிப்பு சாதனம் சோதனைச் சாவடிகளில் வழங்கப்படும்.

அவர்கள் வசிக்கும் இடத்தை அடைந்தவுடன் மின்னணு கண்காணிப்பு சாதனத்தை செயல்படுத்த தொடங்க வேண்டும்.

அந்த சாதனம் செயல்படுத்தப்படாவிட்டால், அதிகாரிகள் பயணியின் இருப்பிடத்தைத் தீர்மானிக்க பின்தொடர்வார்கள், மேலும் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க உதவுவார்கள், அல்லது அமலாக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

14 நாள் காலகட்டத்தில், சாதனங்கள் மூலம் பயணிகளுக்கு அறிவிப்புகள் வழங்கப்படலாம், சரியான நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வசிக்கும் இடத்தை விட்டு வெளியேற அல்லது மின்னணு சாதனத்தை சேதப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கையை வழங்கும், அவர்கள் பின்னர் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.

பயணி தனது வசிப்பிடத்தை விட்டு COVID- 19 சோதனைக்காக வெளியேறும்போது மட்டும் இதற்கு விதிவிலக்கு வழங்கப்படும்.

வீட்டில் தங்கும் உத்தரவை மீறும் அல்லது சாதனத்தை சேதப்படுத்தி பிடிபட்டவர்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த சாதனங்கள் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் சேமிக்காது மற்றும் குரல் அல்லது காணொளிகளையும் பதிவு செய்யாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும், அவரின் வேலையையும் காப்பாற்ற தயார்; இங் சீ மெங்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg