துவாஸ் துறைமுகக் கட்டுமான தளத்தில் “நீர்சுழற்சி” – கடலில் கடும் இடி மின்னலுடன் கூடிய மோசமான வானிலை

துவாஸ் துறைமுகக் கட்டுமான தளத்தின் தோன்றிய "நீர்சுழற்சி" - கடலில் கடும் இடி மின்னலுடன் கூடிய மோசமான வானிலைwaterspout-tuas
Zaw Min Tun/Facebook

துவாஸ் துறைமுகக் கட்டுமான தளத்தின் அருகே கடந்த அக்.16 அன்று இயற்கையின் அழகு “நீர்சுழற்சி” தோன்றியது.

Zaw Min Tun என்ற ஃபேஸ்புக் பயனர் ஒருவர், சுழலும் காற்றுடன் மேகப்படலம் அடங்கிய அந்த காணொளியை அவர் பகிர்ந்துள்ளார்.

உணவகங்களில் சாப்பிட செல்வோர் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும் – வெளியான விதிகள்

சுமார் எட்டு நிமிடங்களுக்கு இந்த நீர்சுழற்சி நீடித்ததாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கூறியது.

திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை துவாஸ் துறைமுக கட்டுமானப் பகுதிக்கு அருகில் துவாஸுக்கு மேற்கு கடலில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மோசமான வானிலை காணப்பட்டதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (MSS) கூறியது.

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, அதே போல பொருட்சேதமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இவை சூறாவளியைப் போலல்லாமல், நிலத்திற்குப் பதிலாக நீர் தளத்தின் மேல் உருவாகின்றன.

பொதுவாக இந்த நீர்சுழற்சி சூறாவளியை விட சிறிய அளவிலும் அதன் தீவிரம் குறைவாகவும் காணப்படும்.

சிங்கப்பூரில் நீர்ச்சுழற்சி தோன்றுவது புதிதல்ல, இதற்கு முன்னரும் இவ்வாறு தோன்றியுள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரையில் தோன்றிய இயற்கையின் அழகு நீர் சுழற்சி – காணொளி

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை