இந்தியர் உட்பட இருவரின் மரணத்திற்கு COVID-19 காரணம் இல்லை : சுகாதார அமைச்சகம்..!

MOH reported two more deaths in COVID-19 cases that were not linked to the disease.
MOH reported two more deaths in COVID-19 cases that were not linked to the disease.

சிங்கப்பூரில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர், ஆனால் அவர்களின் மரணத்திற்கு COVID-19 தொற்று காரணமில்லை என்று சுகாதார அமைச்சகம் MOH தெரிவித்துள்ளது.

சம்பவம் 23908 என அடையாளம் காணப்பட்ட, 50 வயதான தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், நேற்று மே 12 அன்று உயிரிழந்தார். கடந்த மே 10 அன்று சுவாசக் பிரச்சனை காரணமாக அவர் Ng Teng Fong பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

அவருக்கு மறுநாள் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும், மூளை இரத்தக் கசிவு தான் அவரின் மரணத்திற்கு காரணம் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு நபர்

சம்பவம் 24013 என அடையாளம் காணப்பட்ட 31 வயதான ஆண் இந்திய நாட்டவர், மே 10 அன்று உயிரிழந்தார் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

அவர் இறந்த பின்னர் மே 11 அன்று அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 877 பேர் பாதிப்பு..!