சிங்கப்பூரில் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறிய இரண்டு இடங்களை மூட உத்தரவு

JUDGEMENT

சிங்கப்பூரில் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறிய இரண்டு இடங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு இடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று (மே 19) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டோர் சென்றனர்

இந்த மூடல் உத்தரவுகள், வரும் ஜூன் 13க்குப் பிறகு மீண்டும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கும்போது நடைமுறைக்கு வரும் என்று அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

NParksஆல் நிர்வகிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுக்களாக கூடியதற்காக ஒன்பது நபர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மேலும், Ngee Ann Cityஇல் உள்ள Food Village, The Sushi Bar Dining ஆகிய உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகள் மற்றும் மூடல் விவரம்:

  • Viva Vista மாலில் உள்ள HooHa Restaurant & Cafe 30 நாட்கள் (3வது முறை விதிமீறல்)
  • Alice @ Mediapolisஇல் உள்ள Darts Legend 20 நாட்கள் (2வது முறை விதிமீறல்)

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு நிரந்தரமாக வேலைசெய்யத் தடை