ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

கடந்த ஜூலை 11- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை (Monkey Pox) பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்ட நிலையில், அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து புனேவில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

20 பேருடன் சென்ற பேருந்து… 15 பேர் சிங்கப்பூர் பயணிகள்: லாரி – பேருந்து மோதி விபத்து

அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளின் சுகாதாரத்துறைச் செயலாளர்களுக்கு இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை பரிசோதனை குழுக்களை மாநிலங்கள் தயார் நிலையில் அவசியம் வைத்திருக்க வேண்டும்.

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் – தானம் செய்ய முன்வர அழைப்பு விடுத்த ஓங் !

குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கட்டாயமாக குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் குடல் புண் நோய் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்தால், உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.

குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மாநில அரசுகள் உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான அளவு படுக்கை வசதிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் தொடர்ந்து கண்டறியப்படும் குரங்கம்மை பாதிப்பு

சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 60- க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.