வேலை இல்லாததால் பெற்றோருடன் சண்டை.. சிங்கப்பூரில் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவருக்கு 12 பிரம்படி

Singapore Caning
Singapore Caning

வேலையில்லாத காரணத்தால் குடும்பத்தில் பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 32 வயதான ஆடவர் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

செலவுக்கு பணம் இல்லாததால், அவர் பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 11 இல் உள்ள மினிமார்ட்டில் கொள்ளையடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகள்: SIA, Scoot அதிரடி – 121 இடங்களுக்கு, 370,000 டிக்கெட்டுகள்

பையில் கத்தியை மறைத்து வைத்திருந்த இம்ரான் சுல்கிஃபி என்ற அந்த ஆடவர் மினிமார்ட் கடையில் நுழைந்தார்.

பின்னர் அங்கிருந்த ஊழியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி S$580 பணத்தை கொள்ளையடித்து அவர் தப்பியதாக சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொள்ளைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட இம்ரானுக்கு அக்டோபர் 30, அன்று மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு சேர்த்து 12 பிரம்படிகளும் அவருக்கு விதிக்கப்பட்டது என ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியது.

இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி, இம்ரான் தனக்கு வேலையில்லாத காரணத்தால் பெற்றோருடன் சண்டையிட்டது விசாரணையில் தெரியவந்தது.

வேலையில்லாத அவர் எப்பொழுதும் வீட்டிலேயே தங்கி இருந்ததால் பெற்றோர்கள் கவலையில் திட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1, 2023 அதிகாலையில் அவர் கொள்ளையில் ஈடுபட்டார்.

குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு ஒரு முறை மொத்தத் தொகை வழங்க முதலாளிகளுக்கு பரிந்துரை