தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணம்: இந்த நாட்டின் மாற்று தடுப்பூசி சான்றிதழ்களை சிங்கப்பூர் ஏற்கும்

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தில் (VTL) அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளிடம் மாற்று கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சிங்கப்பூர் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தரம்வாய்ந்த தடுப்பூசி சான்றிதழ் அமைப்பு இல்லாததால், அங்குள்ள சிங்கப்பூரர்கள் VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் திரும்புவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

போக்குவரத்து சிங்னல் இல்லாதபோது சாலையை கடந்த மூதாட்டி – நூலிழையில் தப்பிய காணொளி

இதனை அடுத்து இந்த மாற்று கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சிங்கப்பூர் ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடுப்பூசியின் டிஜிட்டல் சரிபார்ப்பு முறை போலி சான்றிதழில் இருந்து பாதுகாப்பதாக அமைந்துள்ளது என்று CAAS கூறியது.

மேலும் அமெரிக்காவைத் தவிர, 16 VTL நாடுகளில் 15இல் வழங்கப்படும் அனைத்து டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களையும் அரசாங்கம் தற்போது சரிபார்க்க முடியும்.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்