செப்.24 முதல் மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை!

Bangladesh man had visited Mustafa Centre
Before being admitted to hospital Bangladesh man had visited Mustafa Centre

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பு பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. அதேபோல், மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 85%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூரில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முழுமையாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவ 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது பூஸ்டர் தடுப்பூசிப் போடும் பணித் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… ‘CMTG’ அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த பிரதமர்!

கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட, பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பணியிடத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிதல்; சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவுதல் போன்ற அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில், கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (22/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. அதன்படி, வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.

அக்டோபர் 23- ஆம் தேதி வரை புதிய விதிமுறைஅமலில் இருக்கும். மருந்துவமனைகள் மீதும் சுகாதார கட்டமைப்பு மீதும் நெருக்கடி எழாமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் குறிப்பிட்ட வருகையாளர்கள் சிலர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைகளும் எடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்களுக்கும் மருத்துவமனைக்குச் சொந்தமான இடங்களிலும் நோய்ப்பரவல் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையை சிறப்பாக சமாளித்த சிங்கப்பூர் நிறுவனங்கள்!

கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து வரும் நிலையில், அவர்கள் நீண்ட நேரம் மருத்துவமனைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நோயாளிகளுக்கு காலதாமதமின்றி உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிச் செய்யும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.