சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரத்திற்கு வானிலை நிலவரம் என்ன..?

Warm and wet conditions to continue for next two weeks in April: Weatherman
Warm and wet conditions to continue for next two weeks in April: Weatherman

சிங்கப்பூரில் தற்போதைய வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை குறைந்தது அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வாளர் புதன்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்துள்ளார்.

இதன் பொருள், ஏப்ரல் இரண்டாம் பாதியில் அதிக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரே நாளில் 447 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

மேலும் சில நாட்களில் வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் (MSS) தெரிவித்துள்ளது.

இந்த ஏப்ரல் மாதம், பொதுவாக ஆண்டின் வெப்பமான மாதங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் தினசரி வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் MSS தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு..!