சிங்கப்பூர் தேசிய தினம்: பிரதமர் லீ அவர்களின் தேசிய தினச் செய்தி..!

‘We will need this unity and resilience more than ever’ in fight against COVID-19, says PM Lee in National Day message
(Photo: MCI)

சிங்கப்பூர் COVID-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, முன்னெப்போதையும் விட இந்த ஒற்றுமை தேவை என்பதை பிரதமர் லீ சியென் லூங், வருடாந்தர தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவந்து, கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் பல நாடுகளில், COVID-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததை பற்றி திரு. லீ குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை..!

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி சிங்கப்பூருக்கும் ஏற்படக்கூடும், என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்து பரவலாகக் கிடைப்பதற்கு ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும், மேலும் இந்த கிருமித்தொற்றின் அச்சுறுத்தல் குறைந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதுவரை, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், மேலும் நம்மையும், நம்முடைய அன்புக்குரியவர்களையும், அண்டை வீட்டாரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தக மூடல்கள், ஆட்குறைப்பு மற்றும் வேலையின்மை அனைத்தும் வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்பதையும் திரு. லீ குறிப்பிட்டார்.

இருப்பினும், இது சிங்கப்பூரின் முதல் பொருளாதார நெருக்கடி அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 1997 ஆசிய நிதி நெருக்கடி, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 2007 முதல் 2009 வரையிலான உலக நிதி நெருக்கடி ஆகியவற்றை மேற்கோளிட்டு காட்டினார்.

இந்த தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வோம் என்று நம்புவதாகவும், அதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும், நாம் அனைவரும் நம் பங்கைச் செய்ய வேண்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை முடிந்தது: MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg