கொரோனா வைரஸ்; மற்ற நாடுகள் சிங்கப்பூரை முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் – WHO அமைப்பு..!

WHO praises Singapore's response to coronavirus outbreak
WHO praises Singapore's response to coronavirus outbreak (PHOTO: EPA-EFE)

கொரோனா வைரஸ் சம்பவங்களை கையாள்வதில் சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகள் பாராட்டினர், மேலும் மற்ற நாடுகளும் அதன் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கன் கிம் யோங்குடன் (Gan Kim Yong) கடந்த திங்களன்று உரையாடியதாக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை..!

“ஒவ்வொரு கொரோனா தோற்று சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கும், அதன் தொடர்புகளைப் பின்தொடர்வதற்கும், மேலும் தொற்று பரவுதை நிறுத்துவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நாங்கள் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்” என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

அதன் பின்னர் மலேசிய சுகாதார அமைச்சரிடம் வெஸ்டர்டாம் உல்லாசக் கப்பல் பற்றி பேசியதாக அவர் கூறினார்.

இந்த சமிக்ஞைகள் கிருமித்தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன, என்றார்.

மேலும், நோயாளிகளுக்கு கண்ணியத்துடனும் இரக்கத்துடனும் சிகிச்சையளிக்கவும், சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கவும், மேலும் நோய் பரவுவதைத் தடுக்கவும் அனைத்து நாடுகளும் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகள் தங்களைத் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும், WHO தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை 21 நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் மேலும் வரும் வாரங்களில் கூடுதலாக 106 நாடுகளுக்கு பாதுகாப்பு பொருட்களை அனுப்பும் என்றும் டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா வைரஸ் என அச்சம்?