வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பளம் அதிகரிப்பு.. “எப்படி சமாளிப்போம்” – சிறிய நிறுவனங்கள் கவலை

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் அதிகரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இதன் காரணமாக சிங்கப்பூரில் உள்ள சிறிய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எகிறிய வேலைவாய்ப்பு… கட்டுமானம், உற்பத்தி துறைகளில் அதிக தேவை

அடுத்த ஆண்டு முதல், E Pass ஊழியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) பெரும்பாலும் குறுகிய நிதி கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன, இதனால் அதிக சம்பளம் என்ற வரம்பை அவைகளால் சமாளிக்க முடியாமல் போகக்கூடும்.”

இதனை Michael Page என்னும் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நிர்வாக இயக்குனர் நிலாய் கண்டேல்வால் சுட்டிக்காட்டினார்.

அதிகரிக்கும் ஊழியர் செலவுகள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறான நிறுவனங்கள் குறைந்த நிதி வளங்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில், அதிக சம்பளத்துடன் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் கடும் சவாலை எதிர்கொள்ளக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்

புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்

லிட்டில் இந்தியாவில் ஊழியர் செய்த உதவி.. சர்ப்ரைஸ் கொடுத்த வெளிநாட்டு பெண்