உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல்

world-war-ii-bomb-updates spore
Today

அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு இன்று செயலிழப்பு செய்யப்படுகிறது.

இதன் காரணமாக வேலை செய்யும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமான தளத்தில் 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு.. குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் காலி செய்ய வலியுறுத்தல்

அதாவது சுமார் 4000 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல, புக்கிட் பாஞ்சாங் மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.

அதனை சுற்றி சுமார் 200 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் அருகிலுள்ள பள்ளிகள் தங்கள் கட்டிடங்களை காலி செய்யுமாறும் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதன் எடை 100 கி.கி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

“நீங்கள் இந்தியா.., நீங்கள் மிக மோசமானவர்”- சிங்கப்பூரில் இனவாத கருத்துக்களை கூறிய வாடகை கார் ஓட்டுநர்