சிங்கப்பூரின் 2ம் கட்டத் தளர்வு – தேவாலயங்களில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை ஒன்றுகூட அனுமதி..!

Worship services may resume with up to 50 people at a time in Phase 2 of Singapore's reopening
Worship services may resume with up to 50 people at a time in Phase 2 of Singapore's reopening (Photo: National Heritage Board)

சிங்கப்பூரில் தேவாலயங்களில் வரும் 26ஆம் தேதியிலிருந்து சபை மற்றும் பிற வழிபாட்டு சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் 50 பேர் வரை தேவாலயங்களில் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ம் கட்டத் தளர்வு – ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் வட்டாரத்தில் குவிந்த மக்கள்..!

இந்த 50 பேரில் மத மற்றும் துணை ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை. ஆராதனை அல்லது பிரார்த்தனை கூட்டங்களுக்கு வருபவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.

ஆராதனைக்கான நேரத்தை முடிந்தவரை சுருக்கமாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வழிபாட்டு சேவையின் போது பாடுவது மற்றும் பிற நேரடி நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படாது என்று தெறிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தனித்தனியாக வழிபாடு செய்யும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் 1மீ தூரத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் அவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவில் இருந்தால், குழுக்களுக்கு இடையே 1மீ தூரம் இருக்க வேண்டும்.

ஆராதனையின்போது பக்தர்கள் அனைவரும் முகக்கவசத்தை அணிந்திருப்பது கட்டாயம் ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அருங்காட்சியகங்கள், இந்திய பாரம்பரிய மையம் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg