இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்

WWII bomb at Upper Bukit Timah blown
Raj Nadarajan/TODAY

அப்பர் புக்கிட் திமாவில் உள்ள கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட 100 கிலோ எடைகொண்ட இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு இன்று (செப்.26) மதியம் 12.30 மணியளவில் வெடிக்க செய்யப்பட்டது.

இது முதல் வெடிப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இரண்டாவது வெடிப்பு பின்னர் தொடரும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல்

காலையில் இருந்தே சுமார் 4,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கால வெடிகுண்டுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மேலும் குடியிருப்பாளர்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது பாதுகாப்பானது அல்ல என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த முதல் வெடிப்பு சத்தத்தை பிளாக் 153 கங்சா சாலையில் பிற்பகல் 12:30 மணியளவில் கேட்க முடிந்ததாக கூறப்பட்டுள்ளது.

இவ்வேளையில், டௌவுன் டவுன் (Downtown) பாதை ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாகவும் LTA கூறியது.

பதிவு தொடரும் இணைப்பில் இருங்கள்..

கட்டுமான தளத்தில் 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு.. குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் காலி செய்ய வலியுறுத்தல்