விதிமுறைகளை மீறிய பிரபல பிரியாணி உணவகம் உள்ளிட்ட 16 உணவகங்களுக்கு அபராதம்!

Zam Zam 16 fined for breaching COVID-19 measures
16 restaurant fined for breaching COVID-19 measures

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை வார இறுதியில் மீறிய Zam Zam உள்ளிட்ட 16 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட 16 உணவகங்களில் பொங்க்கோலில் உள்ள ஆறு உணவகங்களும் அடங்கும்.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை கூறிய பிரதமர் லீ, அதிபர் ஹலிமா!

இரண்டாவது முறையாக விதிகளை மீறியதால், நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகமான Zam Zam உணவகத்திற்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 24) தெரிவித்துள்ளது.

மற்ற 15 உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களுக்கு தலா S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது, இதில் பொங்க்கோலில் உள்ள ஆறு உணவகங்கள் அடங்கும்.

COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக 36 பேருக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்பட்டதாக MSE தெரிவித்துள்ளது.

நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்; இல்லையெனில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட மற்றும் கூட்டு தியாகங்கள் அனைத்தும் வீணாகிவிடும் என்று MSE தெரிவித்துள்ளது.

தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான பிரபல கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் காலமானார்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…