சர்க்யூட் பிரேக்கர் விதிமுறைகளை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் – அமைச்சர் மசகோஸ்..!

Covid-19: First-time offenders to be fined S$300 for breaching ‘circuit breaker’ rules instead of given a warning, Masagos says
Covid-19: First-time offenders to be fined S$300 for breaching ‘circuit breaker’ rules instead of given a warning, Masagos says (Photo: Yong Jun Yuan/TODAY)

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 12) முதல், சர்க்யூட் பிரேக்கர் என்னும் புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இன்னும் அதிகமானவர்கள் இந்த நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதை அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : போக்குவரத்துக்கு எதிர்திசையில் லாரியை இயக்கிய ஓட்டுநர் கைது – ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து..!

3,000-க்கும் மேற்பட்ட எழுத்து வடிவிலான கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற விதிமுறையை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் தேவை என்றும் திரு மசகோஸ் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை முதல், இனி எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகளை வழங்க மாட்டோம் என்றும், அமலாக்க அதிகாரிகள் சந்திக்கும் எந்தவொரு குற்றவாளியிடமும் உடனடியாக (அவர்களின்) விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

முதல் முறை குற்றவாளிகளுக்கு $300 அபராதம் விதிக்கப்படும், மேலும் அதே குற்றத்தை மீண்டும் புரிவோருக்கு அதிக அபராதம் அல்லது மிக மோசமான விதிமீறலுக்கு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!