சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 10 உணவகங்களுக்கு அபராதம்..!

10 F&B outlets fined, some ordered to suspend dine-in services
(Photos: Google Maps, Facebook/Zui Teochew Cuisine, Facebook/Der Biergarten)

சிங்கப்பூரில் COVID-19 பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட, பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியதற்காக பத்து உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகரச் சீரமைப்பு ஆணையம் (URA) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இடைவெளி சோதனைகளின் ஒரு பகுதியாக, கடந்த வார இறுதியில் பல இடங்களில் மீறல்கள் கண்டறியப்பட்டதாக URA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : CECA உடன்பாடு இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் உடனடி குடியுரிமை அல்லது PR வழங்காது: MTI விளக்கம்..!

China Square மற்றும் பிரின்செப் ஸ்டிரீட்டில் உள்ள சில உணவகங்கள் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுயது கண்டறியப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இந்த மீறல்களில், ஐந்து பேருக்கு மேல் முன்பதிவு ஏற்றுக்கொள்வது, பெரிய குழுக்களை ஒன்றிணைத்தல், மேசைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி விட தவறியது மற்றும் இரவு 10.30 மணிக்குப் பிறகு வளாகத்தில் மது அருந்த அனுமதித்தது ஆகியவை அடங்கும்.

இந்த 10 உணவகங்களில் 3-க்கு, கடையினுள் உணவருந்தும் வசதியை இன்று முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவை Der Biergarten, The Mask, Zui Yu Xuan Teochew Cuisine ஆகிய உணவகங்களாகும்.

அதே போல China Squareஇல் உள்ள 2 உணவகங்கள், மதுபானம் விற்பனை செய்ய 10 நாள்களுக்கு தடை விடுதிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஐந்து விற்பனை நிலையங்கள், Place 2 R.E.A.D, Stage, Kanpai 2.0, Srisun Express மற்றும் SOS Salad.

“அனைத்து உணவகங்களும் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பங்கைக் ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இந்த காலகட்டத்தில் தங்கள் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்று URA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் EP அனுமதி, S Pass அனுமதிக்கான குறைந்தபட்ச சம்பள உயர்வு விவரங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg