சிங்கப்பூரில் முக கவச மோசடியில் 3 பேர் உட்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 11 பேர் கைது..!

11 people arrested for various scams, including 3 involving face masks
11 people arrested for various scams, including 3 involving face masks

சிங்கப்பூரில் 25-க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் S$281,000 இழந்துள்ளனர் என்று (மார்ச் 24) போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் பாலர் பள்ளி 2 வாரங்களுக்கு மூடல்..!

கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 18 வரை, 26 – 51 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அந்த 11 பேரில், 42 வயதான ஒருவர், சுமார் S$52,500-க்கும் அதிகமான மோசடியில், அதாவது ஆறு மின்னணு வணிக (e-commerce) மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக கவசம் சம்பந்தப்பட்ட இந்த மோசடிகளுக்கு வாட்ஸ்அப் குழுவைப் பயன்படுத்தியதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக வாடிக்கையாளர்கள் வங்கி மூலம் முன்கூட்டியே பணம் செலுத்திய பின்னர், அவர் தொடர்பில்லாமல் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் மீது மார்ச் 12 அன்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID -19: வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளின் கவனத்திற்கு..!

அதே போல், மோசடிகள் செய்ய வசதியாக தங்கள் வங்கிக் கணக்குகளை குற்றவாளிகள் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே போல், குறைந்தது 13 தனித்தனி மோசடி வழக்குகளில் ஈடுபட்ட மேலும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மது முதலீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் சம்மந்தப்பட்ட மோசடி ஆகும். இதில் சுமார் S$212,500-க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக CNA குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போது, ​​குறிப்பாக COVID-19 சூழலில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil