விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!

28 employers fined $1k each for breaching safe distancing rules when ferrying workers in lorries
28 employers fined $1k each for breaching safe distancing rules when ferrying workers in lorries

பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமல், லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே குற்றத்திற்காக மேலும் நான்கு முதலாளிகளை மனிதவள அமைச்சகம் (MOM) விசாரித்து வருகிறது என்று அமைச்சகம் தனது முகநூல் பதிவில் (ஏப்ரல் 17) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு காணொளி வெளியிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின்..!

திங்கள்கிழமை முதல் MOM, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியோரால் தீவு முழுவதும் பல அமலாக்க அமைப்பு மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிகாரிகளால் லாரிகள் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் முதலாளிகள் பிடிபட்டனர்.

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் கடந்த திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது முதலாளிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் அதிகபட்ச இருக்கையை ஏற்பாடு செய்ய வேண்டும், அப்போது தான் ஊழியர்கள் அமர்ந்திருக்கும்போது ஒருவருக்கொருவர் 1 மீட்டர் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்ட விதிமுறைகளை மீறும் எந்தஒரு முதலாளிக்கும், $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும், மீண்டும் விதிமுறைகளை மீறினால் அபராதம் இரட்டிப்பாகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் உச்ச அளவாக 728 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!