ஜூரோங் வெஸ்ட்டில் ஆடவரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் மீது குற்றச்சாட்டு..!

SINGAPORE - Edmund Kam Wei Liang, age 21, has been charged with stabbing a man in Jurong West, and is believed to be involved with Theo Shu Ren (28).
SINGAPORE - Edmund Kam Wei Liang, age 21, has been charged with stabbing a man in Jurong West, and is believed to be involved with Theo Shu Ren (28).

சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட்டில் ஒருவரை கத்தியால் குத்தியதில் எட்மண்ட் காம் வீ லியாங்கின் மீது (Edmund Kam Wei Liang) (வயது 21) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, இவருடன் இணைந்து தியோ ஷு ரென் (வயது 28) ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவ்விருவரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த தியோ ஜியா வேக்கு (வயது 26) கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியர் உட்பட இருவரின் மரணத்திற்கு COVID-19 காரணம் இல்லை : சுகாதார அமைச்சகம்..!

இருவருமே திரு ஜியாவை “கத்தியைப் பயன்படுத்தி அவரது உடலிலும் தலையிலும் பல முறை குத்தியதாக” கூறப்படுகிறது, அந்தக் காயங்கள் “மரணத்தை விளைவிக்கக் கூடியவை” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 42-இல் இந்த சம்பவம் நடந்தது. எட்மண்ட் காம் ரிமாண்ட் செய்யப்பட்டு மே 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அத்துடன் அபராதமோ, பிரம்படியோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

நீதிமன்ற ஆவணங்களில் பெயரிடப்பட்ட, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நபரான தியோ ஷோ ரென் மீது குற்றம் சாட்டப்படவில்லை.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 675 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!